Monday, September 24, 2007

குழந்தைக்கு பொடி இதோ

நம்ப நாட்டில் உள்ள பல இயற்கையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் நமக்கு இடைத்தது ஒரு வரப்பிரசாதம். இதை நிறைய பேர் கவனிக்காமல் சீரீயல்ஸ்ல (artificial cereals) தான் சக்தி இருக்குனு நினைத்து, நிறைய வாங்கி கொடுக்கறாங்க. அதே போல ஜீஸ், நம்ம கையால ஆப்பில், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுக்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் பல பேர் கடையில் கிடைக்கும் ஜீஸ் பாட்டிலை வாங்கி அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் உடம்பில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் தான் சேர்கிறது. நாமும் இயற்கையோடு ஒன்றி, இயற்கை உணவுகளை கொடுத்தால், குழந்தைகளுக்கு நல்ல சத்துக்கள் உடம்பில் சேரும்.

இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், மாகி நூடுல்ஸ் (magie noodles) இதிலுள்ள ரசாயன கலப்பு உடம்பிற்கு மிகவும் கெட்டது. ஆனால் முக்கால்வாசி வீட்டில் இது தான் குழந்தைகளுக்கு மாலை உணவு. இது பிற்காலத்தில் அவர்கள் உடம்பை மிகவும் பாதிக்கும். அதற்காக அவர்களுக்கு வெளி உணவே கொடுக்காதீர்கள், என நான் சொல்லவில்லை. அதையும் கொடுங்கள், இயற்கை உணவுகளை அதிகம் கொடுங்கள் என்று தான் சொல்கிறேன்.

இந்த இயற்கையான சத்துமாவு கஞ்சியை குழந்தைகளுக்கு வீட்டில் செய்து தினமும் கொடுத்தால், அது அவர்கள் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கஞ்சிப்பொடி செய்யும் முறை;

சம்பா கோதுமை -- 200 கிராம்
ஜவ்வரிசி -- 100 கிராம்
கம்பு -- 100 கிராம்
கேள்வரகு -- 100 கிராம்
பார்லி -- 100 கிராம்
பாசிப்பருப்பு -- 100 கிராம்
பாதாம், முந்திரி -- 100 கிராம் (இரண்டும் சேர்த்து)
புழுங்கலரிசி -- 200 கிராம்
பொட்டுக்கடலை --100 கிராம்
ஏலக்காய் -- 4 எண்ணிக்கை.

புழுங்கலரிசி, கோதுமை, கம்பு, கேள்வரகு இவற்றை சுமார் ஒரு மணிநேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி துணியில் உலர்த்தி, அதை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். ஆனால் முந்திரி, பாதாம் இவற்றை லேசாக வறுத்தால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள சாமான்களில் பார்லியையும், பொட்டுக்கடலையையும் வறுக்க வேண்டாம். இவை அத்தனையையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக திரித்து வைத்துக்கொள்ளவும்.

இவ்வளவே தாங்க, நீங்களும் உங்க குழந்தைக்கு பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?

குறிப்பு; இதில் நான் ஏதாவது சொல்ல மறந்திருநால் தயவு செய்து குறிப்பிடவும்.

Thursday, September 13, 2007

ஆயர்பாடி மாளிகையில்

நான் தாலாட்டு பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை எஸ் பி பி பாட இன்று முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு இனிமையாக இருக்கும். இப்பாடலை கேட்க இங்கே அழுத்தவும்.

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல்
மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணனை உண்டு
மண்டலத்தை காட்டியப்பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவளுரங்க
மயக்கத்திலே இவனுரங்க
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)

நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அந்த மோகநிலைக் கூட, ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன் பொன்னழகை பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெருவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)